Web Analytics Made Easy -
StatCounter

டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று (25.09.2023) தொடங்குகிறது. டிசம்பர் 1 முதல் 20 – ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று…

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (செப்டம்பர்-28) இரவு 06:49 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (செப்டம்பர்-29) மாலை 03:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி உண்டியல் திறப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி உண்டியலில் ரூ.1,94,91,430 மற்றும் 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி காணிக்கை வசூலானது என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அஷ்டமி வழிபாடு!

திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (22.09.2023) அஷ்டமி வழிபாடு நடைபெறுகிறது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (21.09.2023) காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் துவக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (18.09.2023) துவங்கபட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மூன்றாம் பிரகார சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத பூஜைக்காக செப்.17ல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் வரும் செப்-18 ஆம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு செப்-17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.

சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு செப்-21 பந்தக்கால் முகூர்த்தம்!

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப விழா நவம்பர் 14-ஆம் தேதி கொடியேற்றம் துவங்க உள்ளது. அதைத்தொடர்ந்து பந்த கால் முகூர்த்தம் வருகின்ற 21.09.2023 காலை 7.30 மணிக்கு மேல் 8.30…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கணினி மூலம் Clipdrop பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொண்டனர்!

 நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் Clipdrop -யை கணினியை பயன்படுத்தி Editing செய்வது பற்றி தெரிந்து கொண்டனர்.

புரட்டாசி மாதம் வருவதையொட்டி 4 மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு!

புரட்டாசி மாதம் வருவதையொட்டி சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு  044-25333333, 1800 4253…

விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள்: களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரிக்க அனுமதி கிடையாது. மரங்களில் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ 4.75 கோடி வசூல்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 4.75 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செப்டம்பர் மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. sabarimalaonline.org என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்யலாம்.

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (04.09.2023) தொடக்கம்!

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (04.09.2023) அரோகரா முழக்கத்துடன் தொடங்கியது. இவ்விழா 12 நாட்கள் நடைபெறும், இந்த விழாவில் தினந்தோறும் காலை, மாலை என சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி…

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம் – தமிழ்நாடு அரசு தகவல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி செப்டம்பர் 17-ஆம் நாள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 18 – ஆம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாதம் சிறப்பு அபிஷேகம்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மாதம் (29.08.2023) செவ்வாய்கிழமையான நேற்று சதுர்த்தசி திதியில் சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜர் சுவாமி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை…

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூரில் இருந்து 50, சென்னையிலிருந்து 30, திருப்பத்தூரில் இருந்து 30, ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என வேலூர் போக்குவரத்து மண்டலம்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பௌர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நாளை (30.08.2023) பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (28.08.2023) ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில் திரளான…

திருவண்ணாமலையில் ஆவணி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமி கிரிவலம் புதன்கிழமை (ஆகஸ்ட்-30) காலை 10:58 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (ஆகஸ்ட்-31) காலை 07:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

திருவண்ணாமலை – விழுப்புரம் சிறப்பு ரயிலானது 30ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12:40 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரத்திற்கு பிற்பகல் 02:45 மணிக்கு வந்தடையும். விழுப்புரம்-திருவண்ணாமலை சிறப்பு விரைவு ரயிலானது 30-08-23 தேதி விழுப்புரத்திலிருந்து இரவு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் தேதி, நேரம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்று (21.08.2023) காலை 10 மணி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

கலசபாக்கத்தில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளியில் மாரியம்மன் திருவீதி உலா!

கலசபாக்கத்தில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளியை முன்னிட்டு நேற்று (18.08.2023) கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் அலங்கார திருவீதி உலா நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற உள்ளது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை திருநாளான இன்று(09.08.2023) முருகன் பெருமானுக்கு அபிஷேக சிறப்பு ஆராதனை நடைபெற்றது.…

ஆடி அமாவாசை எப்போது? பித்ரு தோஷ பரிகாரம் செய்ய உகந்த நேரம்..

ஆகஸ்ட் 16 அன்று, ஆடி அமாவாசை வருகிறது. அன்று காலை ஸ்நானம் மற்றும் தானம் செய்வதற்கான நேரம் காலையிலேயே தொடங்குகிறது. காலை 05.51 மணி முதல் 09.08 மணி வரை நீராடி தானம் செய்யலாம்.…

ஆடி கிருத்திகையை முன்னிட்டு 133 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை (09.08.2023) திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் செய்யாறு பகுதிகளில் இருந்து திருத்தணி கோயிலுக்கு 106 சிறப்பு பேருந்துகளையும் , வில்வாரணி, காஞ்சி கோயில்களுக்கு 47…

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று (01.08.2023) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் ஆடி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-1) அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஆகஸ்ட்-2) அதிகாலை 01:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

திருவண்ணாமலை மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் உள்ளூர்,வெளியூர் & வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கிறார்கள். நேற்று(25.07.2023) மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் தலைமையில் பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.…

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் ஆடி பிரமோற்சவ விழா சனிக்கிழமை (22.07.2023) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா ஆடி மாதம் 16…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சனிக்கிழமை (22.07.2023) காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு அருள்மிகு உண்ணாமுலையம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும் அதனை தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற்றது.…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர உற்சவம் !

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடிப்பூர உற்சவ விழா நேற்று (22.07.2023) காலை அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா நாளை (ஆடி – 06) முதல் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக நாளை காலை தங்க கொடிமரத்தில்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (17.07.2023) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனிக்கிழமை (15.07.2023) ஆனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை திருநாளான இன்று(13.07.2023) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 2

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இரண்டாம் நாள் முன்னிட்டு சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் ஆனி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இன்று (08.07.2023) அண்ணாமலையார் சன்னதி அருகே…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனிக்கிழமை (01.07.2023) ஆனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலையில் ஆனி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை-2) இரவு 07:42 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை (ஜூலை-3) மாலை 05:46 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழா!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அருள்மிகு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.30 மணியளவில் சிறப்பு பூஜையுடன் மகா தீபாராதனையும், அதன் பின் மாடவீதி உலாவும்…

அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு நேற்று (25.06.2023) இரவு ஆயிரம்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு…

தொடர்பு கொள்ள