Web Analytics Made Easy -
StatCounter

கடலாடி / Kadaladi

கிராம ஊராட்சியின் பெயர் : கடலாடி
பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்
 கிராம பஞ்சாயத்து தலைவர்
( 2019 – 2024 )
 திரு என். ஆறுமுகம்

கடலாடி அறிமுகம்

இந்தியா, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஒர் ஊராட்சி ஆகும். இதன் அருகில் கலசபாக்கம், துரிஞ்சாபுரம், புதுப்பாளையம் மற்றும் போளூர் போன்ற ஒன்றியங்கள் உள்ளன. இக்கிராமத்தின் வடக்கு திசையில் புகழ்பெற்ற பர்வத மலை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும், ஆண்கள் 7540 பேரும் உள்ளனர். இக்கிராமத்தின் முக்கிய தாெழில் விவசாயம் ஆகும். செய்யாறு மற்றும் கல்லாறு மற்றும் இக்கிராமத்தை சுற்றியுள்ள ஏழு ஏரிகளிலிருந்து கிடைக்கும் நீரிலிருந்து விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த ஊராட்சியில் உள்ள முக்கிய கோவில்கள் : வன்னீஸ்வர் மற்றும் கரைகண்டீஸ்வரர் கோயில், லட்சுமி நாராயணபெருமாள் கோயில், காமாட்சியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், திரௌபதியம்மன் கோயில், காளியம்மன் கோயில், அதிகண்ணியம்மன் கோயில்

இந்த ஊராட்சியில் உள்ள பள்ளிகள்: அரசு மேல்நிலைப் பள்ளி, நிதிஉதவி தொடக்கப்பள்ளி, காமராஜ் நர்சரிப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மாம்பாக்கம்., ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மேல்கொடி., ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளி, ஜெகஜோதி மெட்ரிக் பள்ளி.,
ஸ்ரீராகவேந்திரா நர்சரி & பிரைமரி பள்ளி, கடலாடி,

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (08.02.2024) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை சுற்றி 26 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம்!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் மற்றும் கடலாடி இடையே அமைந்துள்ள பருவதமலை 4560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பிரம்ம சமேத மல்லிகார்ஜுனார் கோவில் உள்ளது. நேற்று (17.12.2023) மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (24.11.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (24.11.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல்  5 மாலை மணி வரை காஞ்சி துணைமின்…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் அன்று (22.9.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்டம்பர் மாதம் (22.9.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காஞ்சி…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காஞ்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர்,…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காஞ்சி துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (21.07.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைபாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி…

நேரடி நெல் கொள்முதலுக்கான உழவர் பதிவு!

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் தங்கள் விவரங்களை www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தின்…

கடலாடி கிராமத்தில் வீற்றிருக்கும் அம்மன் ஆலயங்களில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு 29-ம் ஆண்டு லட்ச தீபாராதனை விழா!

கலசபாக்கம் வட்டம் கடலாடி கிராமத்தில் வீற்றிருந்து மக்களுக்கு நல்லன யாவும் செய்து வரும் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ கங்கை அம்மன், ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயங்களில் நாளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *