என் ஊர் ! என் மக்கள் ! என் தேசம் !
வாழ்க்கையில் உயர நினைப்பவர்களுக்கான களம். நமது கலசப்பாக்கம் மக்களின் உயர்வுக்கு வழிவகுக்கும் ஏணிப் படிகள்.
நமது கலசபாக்கம்.காம் இணையதளம் கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள ஒவ்வொரு ஊரில் வாழும் மக்களின் அடிப்படை வசதி, கல்வி, சுகாதாரம், தொழில், பணம், மக்கள் முன்னேற்றம், மன அமைதி, சந்தோஷம், ஆரோக்கியம் இந்த விஷயங்கள் எல்லாம் கவனமெடுத்து செயல்பட உள்ளது. தொழில்துறையில் முன்னணியில் உள்ள சில ஜாம்பவான்கள் இதற்காக நம்முடன் கைகோர்க்க இருக்கின்றனர்
கலசப்பாக்கம் மட்டுமல்லாமல் கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களில் வாழும் மக்களும், அங்கு வாழ்ந்து தற்போது வெளியூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களும் வாழ்வாங்கு வாழ என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக செய்ய இருக்கிறோம்.
மக்களின் வளமான வாழ்க்கையிலும் முன்னேற்றத்திலும் ஒரு சாமானிய குடிமகனின் எண்ணத்திலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வளமான வாழ்வை அமைத்து கொடுக்க உங்கள் துணையுடன் எங்களால் முயன்ற ஒரு பங்கேற்பு.
உங்கள் குடும்ப உறுப்பினராகவும் எங்களோடு இணைந்திருங்கள்.
இது ஒரு கூட்டு முயற்சி...
நம்ம கலசப்பாக்கம் மக்களுக்காக...
இணைவோம் ! உயர்வோம் !
வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.