Web Analytics Made Easy -
StatCounter

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு!

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் மீண்டும் மழை!

கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் மழை ஆரம்பமாகியுள்ளது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, இதன் தொடர்ச்சியாக மாலையில் திடீரென மழை பெய்து வருகின்றது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் தெரிவித்துள்ளது.

கலசபாக்கத்தில் இன்று அதிகாலை முதல் மிதமான மழையும் குளிர்ந்த காற்றும்!

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழையுடன், குளிர்ந்த காற்று வீசி வருகின்றது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 6 மணிக்குள்) புயலாக வலுப்பெறுகிறது. புயலாக வலுப்பெற்ற பின் மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாட்டில்…

சென்னையில் நவ.29, 30ல் ஆரஞ்ச் அலர்ட்!

நவ.29, 30ல் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் அன்றைய நாட்களில் மிக கனமழை பெய்யக்கூடும்…

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழ்நாட்டில் திருப்பத்தூர், திருவண்ணாமலையில் இன்று மிக கனமழை பெய்யும்.நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், காஞ்சி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. -சென்னை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கத்தில் அதிக மழை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசபாக்கம் பகுதியில் 166.00 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…

கனமழை உதவி எண்கள்

சென்னை மாநகராட்சி மழை புகார்களுக்கு 1913 9445551913 காஞ்சிபுரம் மாவட்ட மழை புகார்களுக்கு 044-27237107 8056221077 திருவள்ளூர் மாவட்ட மழை புகார்களுக்கு 044-27664177 044-27666746 9444317862

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்…

கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்…

7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.

கலசபாக்கத்தில் நேற்று முன்தினம் மழையின் அளவு!!

கலசபாக்கத்தில் நேற்று முன்தினம் 16 மில்லி மீட்டர் மழையின் அளவு பதிவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் !

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பிப்ரவரி 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 3 முதல் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று (08.01.2024) ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று (ஜன.08) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து தொடர் மழை பெய்து கொண்டு இருப்பதால் இன்று (08.01.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கலசபாக்கத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் பனிச்சாரல் மழை பொழிவு!

கலசபாக்கம் பகுதியில் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.தற்பொழுது பனிச்சாரல் மழை பெய்து வருகிறது.காலை முதல் குளிர்ந்த காற்று வீசி வருகின்றது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (16.12.2023 ) மற்றும் நாளை மறுநாள் (17.12.2023 ) ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது…