Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் மின்சார வாரியம் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு வார விழா 2021

மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா - 2021 (14-12-2021 முதல் 20-12-2021) வரை

குண்டு பல்புகளுக்கு பதிலாக CFL அல்லது LED விளக்குகளை பயன்படுத்தவும்.
பகலில் இயற்கை காற்றையும், சூரிய ஒளியையும் அதிக அளவில் பயன்படுத்தவும்.
அதிக நட்சத்திரக் குறியீடு, அதிக மின் சேமிப்பின் அடையாளம்.
மின் செலவினைக் குறைத்திட குளிரூட்டியை 25 சென்டிகிரேட் அளவில் இயங்கும்படி வைக்க வேண்டும்.
குளிரூட்டி இயங்கும் போது மின் விசிறியை பயன்படுத்துவதால் அறை முழுவதும் குளிர் சீராக பரவும்.
மின் சூடேற்றிக்கு பதிலாக சூரிய சக்தி நீர் சூடேற்றியைப் (Solar Water Heater) பயன்படுத்தவும்.
எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கரை (ELCB) வீடுகளில் மெயின் சுவிடச் போர்டில் பொருத்தினால் மின் கசிவால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற நட்சத்திரக் குறியிட்ட மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மோட்டார், அயர்ன் பாக்ஸ், வாளியில் சொருகும் வாட்டர் ஹீட்டர் ஆகியவை மின் இணைப்பில் இருக்கும் போது கையால் தொடக்கூடாது.
சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
மின்னலின் போது மின் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
புதிதாக வீடு கட்டுபவர்கள், சுவருக்குத் தண்ணீர் அடிக்கும் போது, அவை மின் கம்பியில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *