Web Analytics Made Easy -
StatCounter

பர்வதமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

கலசப்பாக்கம் அருகே பர்வதமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். மேலும், மலையடிவாரத்தில் கோவில் மாதிமங்கலம் பகுதியில் உள்ள, கரைகண்டீஸ்வரர் கோவிலில் தனுர் மாத உற்சவம் நடப்பது வழக்கம். இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பர்வதமலை கிரிவலம் செல்லவும், மலை மீது ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்யவும் அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *