திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் வளாகத்தில் சுதந்திர தின விழா!
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் வளாகத்தில் சுதந்திர தின விழா!
சுதந்திரம் முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று(15.08.2022) நடைபெற்ற 75வது சுதந்திர தினத்தின் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேசன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர்.
இதில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். பின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.