Web Analytics Made Easy -
StatCounter

தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு அறிவிப்பு !!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 17-ம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்த நாளை கடைசி நாள். ஏப்ரல் 19 விடுமுறை அளிக்காத…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 21 திருக்கல்யாணம், ஏப் 22-ல் தேரோட்டம், ஏப்-23 ல் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுகள் நடைபெறும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த விழா நாளை (13.04.2024) பந்தக்கால் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 14 ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு (13.04.2024) மாலை 4:30 மணி முதல் 06:00 மணி வரை பந்தக்கால் நடும் உற்சவம் நடைபெறும்.

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் 88 முகாம்களில் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல்- 22 ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10-ல் வெளியிடப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை செல்போன் மூலம் பார்க்கலாம்!

பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதனை https://electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது வாக்காளர் பெயர் மற்றும் தொகுதி அல்லது செல்போனில் தெரிந்து…

குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு!

குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,990 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2ஏ தேர்வு நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக 10,214 பேருந்துகள் இயக்கம்!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு…

நீட் தேர்வுக்கு இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம். நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு மே 5-ம் தேதி நாடு முழுவதும் 571 நகரங்களில்…

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 2,400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலையில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 2,400 சிறப்பு பேருந்துகளும், 5,000 போலீஸ் பாதுகாப்பு என முன்னேற்பாடுகள் தீவிரம்.

இந்த ஆண்டின் இன்று முதல் சூரிய கிரகணம்!

இந்திய நேரப்படி இரவு 09:12 மணிக்கு தொடங்கி கிரகணம், அதிகாலை 02:22 மணிக்கு நிறைவடைகிறது. இரவில் சூரிய கிரகணம் நடைபெறுவதால் பார்க்க முடியாது.