Web Analytics Made Easy -
StatCounter

ஜூன் 25-ல் துணை தேர்வு!!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.    

சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்!

• பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு என 80 நபர்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. • கோயில் மூலம் இலவச மற்றும் சிறப்பு தரிசன வழித்தடங்களில் 114 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு சுத்திகரிப்பு…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (07.05.2025) புதன் கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அண்ணாமலையார் கோவில் உண்டியல் வருவாய் ரூ.4 கோடி!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி உண்டியல் 2 நாட்களாக எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.4,00,23,757, தங்கமாக 165 கிராமும், வெள்ளியாக 2740 கிராமும் வருவாயாக கிடைத்துள்ளது.    

பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 95.15% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் கலசப்பாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 95.15% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்: 1ம் இடம்: வீ. சீனிவாசன் – 550…

பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை – 98.05% தேர்ச்சி!

2025 பிளஸ் 2 பொதுத் தேர்வில், கலசப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்ச்சி சதவீதம் 98.05% மொத்தம் 114 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 112 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற…

மாணவிகள் தேர்ச்சி அதிகம்!!

பிளஸ் 2 தேர்வில் 4,05,472 மாணவிகள் (96.7%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி, வழக்கம்போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் (3.54%) அதிகம்.    

சித்ரா பவுர்ணமி சிறப்பு ரயில்!!

சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே மே 11, 12 தேதிகளில் இரு மார்க்கத்திலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு.    

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஆறாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (06.05.2025) செவ்வாய்கிழமை ஆறாம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 4

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (07.05.2025) நான்காம் நாள் இரவு கற்பக விருட்ச மரத்தில் ஆன வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.    

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு!

மே 9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே மே 8-ம் தேதியே வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day 5

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்  (05.05.2023) திங்கட்கிழமை ஐந்தாம் நாள் உற்சவத்தில்  ஒளிவு வைபவம் மற்றும் சிவன் மன்மதனை தேடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு. இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

திருவண்ணாமலையில் வரும் 11ம் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு 2,650 சிறப்பு பேருந்துகள் இயக்கம் சித்ரா பவுர்ணமியன்று சுமார் 30 லட்சம் முதல் 40 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.    

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையர் கோவில் சித்ரா பவுர்ணமி நாளையொட்டி, மே 11ம் தேதி இரவு 8.47 முதல் மே 12ம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் – கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.    

மே 7 முதல் பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கையை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்கிறார்.    

கலசபாக்கத்தில் நேற்று மிதமான மழை – வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது!

கலசபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (04.05.2025) மிதமான மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக அதிகரித்த வெப்பம் குறைந்து, தற்போது பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.  

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 2

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (04.05.2025) இரண்டாம் நாள் இரவு இந்திர விமானம் வீதி உலா நடைபெற்றது.  

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம்! Day 1

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு விநாயகர்-முஷிக வாகனம், சுவாமி- அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.   

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (03.05.2025) சனிக்கிழமை மூன்றாம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.   

மிருகண்டா அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தில் உள்ள மிருகண்டா அணையிலிருந்து, 17 ஏரிகளுக்கான பாசனத்துக்காக இன்று (03.05.2025) முதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 120 கன அடி வீதம், மொத்தமாக 62.208 மில்லியன் கன அடி…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் இன்று (03.05.2025) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

நீட் நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது!!

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, ‘நீட்’ நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது. இந்த தேர்வை எழுத 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.    

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது. 

நமது கலசபாக்கத்தில் JB காம்ப்ளக்ஸில் CONCEPT LEARNING கோடைகால சிறப்பு பயிற்சி!

நமது கலசபாக்கத்தில் JB காம்ப்ளக்ஸில் CONCEPT LEARNING பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் ABACUS, HANDWRITING, CALLIGRAPHY மற்றும் VEDIC MATHS போன்ற சிறப்பு வகுப்புகள், மேலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று (03.05.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று (03.05.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…

திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள்!!

திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்காக 6 தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 3,120 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.    

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி நேற்று இரவு கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை வடிவிலான சேடிப்பெண் பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

கலசபாக்கம் தாசில்தாராக பொறுப்பேற்றார் திருமதி தேன்மொழி – நம் ஊரின் பெருமை!

கலசபாக்கம் மேல் தெருவைச் சேர்ந்த திரு ஆறுமுகம் மற்றும் திருமதி சகுந்தலா தம்பதியர்களின் மகளான திருமதி தேன்மொழி அவர்கள், தற்போது கலசபாக்கம் தாலுகா தாசில்தாரராக பொறுப்பேற்று தங்கள் பணியை தொடங்கியுள்ளார்….நம் ஊரைச் சேர்ந்தவர் தற்போது…

அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி!

அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி புழுங்கல் அரிசி, உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி இன்று முதல் அமல் உள்நாட்டில் அரிசி விலையை நிலைப்படுத்த, இருப்பு, விநியோகத்தை உறுதி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த விழா பந்தக்கால் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தகால் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில் நடப்பட்டது.

100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2,999 கோடி மட்டுமே விடுவித்துள்ளது!!

100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவையில் உள்ள தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், ரூ.2,999 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது.    

ஏ.டி.எம், கட்டணம் உயர்வு!!

மாதத்திற்கு 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.,யில் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் இன்று முதல் ரூ.23 வசூல்; 5 முறைக்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் ரூ.21 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.23 ஆக உயர்வு.    

சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியீடு!

ஓரிரு நாட்களில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல். சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.முதலில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அதை அடுத்து 10-ம்…

கலசபாக்கத்தில் இன்று கிராம சபை கூட்டம்!

கலசபாக்கத்தில் இன்று கிராம சபை கூட்டம் கலசபாக்கம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01.05.2025) கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் நாளை ‘ஊர்தோறும் உணவுத்திருவிழா’!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகள் நடத்தும் ‘ஊர்தோறும்| உணவுத்திருவிழா’ நாளை (01.05.2025) வியாழக்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. மரபுகள் கண்ணமங்கலம் குழுவினர் 9342389024, 7373447938, 9444333092

கலசபாக்கத்தில் நாளை கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் நாளை மே 1, 2025 (வியாழக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறுகின்றது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். இடம் : ஊராட்சி ஒன்றிய…

ஐசிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஐசிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் RESULTS.CISCE.ORG மற்றும் CISCE.ORG இணையதளங்களில் யூஐடி மற்றும் இன்டெக்ஸ் நம்பர் ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை-தண்டராம்பட்டு வட்டாட்சியர் பணியிட மாற்றம்!!

திருவண்ணாமலை வட்டாட்சியர் K.துரைராஜ் தண்டராம்பட்டு வட்டாட்சியராக பணியிட மாற்றம். தண்டராம்பட்டு வட்டாட்சியர் S.மோகனராமன் திருவண்ணாமலை வட்டாட்சியராக பணியிட மாற்றம்.        

கலசபாக்கத்தில் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவில், புதிய தாசில்தாரராக திருமதி.தேன்மொழி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்!!

திருவண்ணாமலையில் அருள்மிகு ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் வருகின்ற (01.05.2025) வியாழக்கிழமை முதல் (10.05.2025 ) சனிக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.    

கலசபாக்கம் அடுத்த பூண்டி மற்றும் பழங்கோவில் இணைக்கும் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!

கலசபாக்கம் அடுத்த பூண்டி மற்றும் பழங்கோவில் இணைக்கும் செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு இன்று (29.04.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் தாராபிஷேகம்!!

அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோயிலில் மே 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இறைவன் திருமேனியை குளிர்விக்கும் தாராபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர காலங்களில் தரிசன நேரத்திலும், அபிஷேக நேரத்திலும் எவ்வித மாற்றம்…

என்சிஇடி நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு!!

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் ஆசிரியர் படிப்புகளுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை என் டி ஏ வெளியிட்டுள்ளது.விண்ணப்பப் பதிவு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை என். டி.ஏ. வின் https://exams.nta.ac.in/NCET/ இணையதளத்தில் அறியலாம்.    

இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு – புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருட வருமானம் உள்ளவர்கள்: கூடுதல் 1 சென்ட் நிலத்திற்கு 25% மதிப்பு செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம்…

ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை – 2025!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் வருகின்ற மே மாதம் 03-ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12ம் தேதி நிறைவு பெறுகிறது.…

பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்ய பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கோடை விடுமுறை நாட்களில் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள்,…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு – ஓய்வூதிய உயர்வு மற்றும் பல நல திட்டங்கள் அறிவிப்பு!

• பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதுதொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்-30-க்குள் அறிக்கை. • அரசு சி மற்றும் டி பிரிவு ஓய்வு ஊதியர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசு தொகை ரூ.1000/- ஆக உயர்வு. •…

தமிழகத்தல் மே 2 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் மே 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் சென்னை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (25-04-2025) பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று (ஏப்ரல் 25) முதல் மே 24-ஆம் தேதி வரை தேர்வாணையத்தின்…

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும்; 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதித்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது – பள்ளிக் கல்வித்துறை. பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.

மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு!

மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டை உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

வணிக வரி வசூல் ரூ.1.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு!!

தமிழக வணிக வரித்துறையின் மொத்த வரி வருவாய், 2024 – 25ல், 1.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டில், 12,139 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.    

பறவைகளுக்காக தண்ணீர் வைக்கும் கலசபாக்கம் குழந்தைகள்!

கலசபாக்கம் பகுதியில், கோடைக் கால வெப்பத்தில் தாகமடையும் பறவைகளுக்காக குழந்தைகள் தங்கள் வீட்டு மொட்டைமாடி மற்றும் பால்கனிகளில் தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வைத்து வருகின்றனர். பறவைகளின் தாகத்தை தீர்க்கும் இந்த அன்பான செயல், மற்றவர்களும்…

வரும் 25-ம் தேதி திருவண்ணாமலையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிப்பு.    

அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று 23-ம் தேதி கடைசி நாள்.    

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு!

UPSC CSE 2024 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 1,009 பேரில் 335 பேர் பொதுப்பிரிவினர். 109 பேர் EWS பிரிவினர், விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in…

குரூப் -1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

கடந்த மாதம் மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற குரூப் -1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஜூலை மாத முக்கிய சேவை.. இன்று முன்பதிவு தொடக்கம்!

திருப்பதி கோயிலில் ஜூலை மாத கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.  ஜூலை மாத சிறப்பு தரிசனம், 300…

சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள்!

சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்கப்படும். கிரிவலப் பாதை முழுவதும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பபட்டுள்ளது. சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு தரிசனம் ரத்து என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்…

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல்  பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்.

மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!!

அனைத்து தாலுகாக்களிலும், ஜமாபந்தி நடத்தும் பணியை, மே 31க்குள் முடிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் – திரு சாய்குமார் அறிவிப்பு.