Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு இன்று (29.04.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் தாராபிஷேகம்!!

அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோயிலில் மே 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இறைவன் திருமேனியை குளிர்விக்கும் தாராபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திர காலங்களில் தரிசன நேரத்திலும், அபிஷேக நேரத்திலும் எவ்வித மாற்றம்…

என்சிஇடி நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு!!

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் ஆசிரியர் படிப்புகளுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை என் டி ஏ வெளியிட்டுள்ளது.விண்ணப்பப் பதிவு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை என். டி.ஏ. வின் https://exams.nta.ac.in/NCET/ இணையதளத்தில் அறியலாம்.    

இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு – புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருட வருமானம் உள்ளவர்கள்: கூடுதல் 1 சென்ட் நிலத்திற்கு 25% மதிப்பு செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம்…

ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை – 2025!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் வருகின்ற மே மாதம் 03-ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12ம் தேதி நிறைவு பெறுகிறது.…

பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்ய பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளாமல் இருந்தால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கோடை விடுமுறை நாட்களில் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள்,…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு – ஓய்வூதிய உயர்வு மற்றும் பல நல திட்டங்கள் அறிவிப்பு!

• பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவதுதொடர்பாக அறிவிக்கப்பட்ட கமிட்டி செப்-30-க்குள் அறிக்கை. • அரசு சி மற்றும் டி பிரிவு ஓய்வு ஊதியர்களுக்கான பொங்கல் பண்டிகை பரிசு தொகை ரூ.1000/- ஆக உயர்வு. •…

தமிழகத்தல் மே 2 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் மே 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் சென்னை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (25-04-2025) பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று (ஏப்ரல் 25) முதல் மே 24-ஆம் தேதி வரை தேர்வாணையத்தின்…

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும்; 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதித்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது – பள்ளிக் கல்வித்துறை. பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.

மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு!

மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டை உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

வணிக வரி வசூல் ரூ.1.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு!!

தமிழக வணிக வரித்துறையின் மொத்த வரி வருவாய், 2024 – 25ல், 1.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டில், 12,139 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.    

பறவைகளுக்காக தண்ணீர் வைக்கும் கலசபாக்கம் குழந்தைகள்!

கலசபாக்கம் பகுதியில், கோடைக் கால வெப்பத்தில் தாகமடையும் பறவைகளுக்காக குழந்தைகள் தங்கள் வீட்டு மொட்டைமாடி மற்றும் பால்கனிகளில் தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வைத்து வருகின்றனர். பறவைகளின் தாகத்தை தீர்க்கும் இந்த அன்பான செயல், மற்றவர்களும்…