Web Analytics Made Easy -
StatCounter

சித்ரா பவுர்ணமி சிறப்பு ரயில்!!

சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே மே 11, 12 தேதிகளில் இரு மார்க்கத்திலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு.    

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் ஆறாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (06.05.2025) செவ்வாய்கிழமை ஆறாம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 4

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (07.05.2025) நான்காம் நாள் இரவு கற்பக விருட்ச மரத்தில் ஆன வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.    

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு!

மே 9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே மே 8-ம் தேதியே வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day 5

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்  (05.05.2023) திங்கட்கிழமை ஐந்தாம் நாள் உற்சவத்தில்  ஒளிவு வைபவம் மற்றும் சிவன் மன்மதனை தேடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு. இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

திருவண்ணாமலையில் வரும் 11ம் தேதி சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு 2,650 சிறப்பு பேருந்துகள் இயக்கம் சித்ரா பவுர்ணமியன்று சுமார் 30 லட்சம் முதல் 40 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.    

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையர் கோவில் சித்ரா பவுர்ணமி நாளையொட்டி, மே 11ம் தேதி இரவு 8.47 முதல் மே 12ம் தேதி இரவு 10.43 வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் – கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.    

மே 7 முதல் பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கையை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்கிறார்.    

கலசபாக்கத்தில் நேற்று மிதமான மழை – வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது!

கலசபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (04.05.2025) மிதமான மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக அதிகரித்த வெப்பம் குறைந்து, தற்போது பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.  

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 2

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (04.05.2025) இரண்டாம் நாள் இரவு இந்திர விமானம் வீதி உலா நடைபெற்றது.  

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம்! Day 1

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு விநாயகர்-முஷிக வாகனம், சுவாமி- அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.   

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (03.05.2025) சனிக்கிழமை மூன்றாம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.   

மிருகண்டா அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தில் உள்ள மிருகண்டா அணையிலிருந்து, 17 ஏரிகளுக்கான பாசனத்துக்காக இன்று (03.05.2025) முதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 120 கன அடி வீதம், மொத்தமாக 62.208 மில்லியன் கன அடி…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் இன்று (03.05.2025) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

நீட் நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது!!

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான, ‘நீட்’ நுழைவுத்தேர்வு, நாளை (மே 4) மதியம் 2.00 மணிக்கு துவங்க உள்ளது. இந்த தேர்வை எழுத 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.