Web Analytics Made Easy -
StatCounter

ஊருக்கு நூறு பேர்.. அதில் ஒருவரா நீங்கள்..?

நமது கலசபாக்கம்.காம் இணையதளம் கலசப்பாக்கம் தாலுகாவில் ஒவ்வொரு ஊரில் வாழும் மக்களில் 100 பேருடன் இணைந்து ஒரு நலனுக்காகவும் அதற்காகவும் செயல்படப் போகிறது இந்த நூறில்ல் ஒருவராக இருக்க உங்களுக்கு விருப்பமா..?

ஒரு ஊரில் அடிப்படை வசதி, கல்வி, சுகாதாரம், தொழில், பணம், மக்கள் முன்னேற்றம், மன அமைதி, சந்தோஷம், ஆரோக்கியம் இந்த விஷயங்கள் எல்லாம் கவனமெடுத்து செயல்படப் போகிறோம் தொழில்துறையில் முன்னணியில் உள்ள சில ஜாம்பவான்கள் இதற்காக நம்முடன் கைகோர்க்க இருக்கின்றனர்.. அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக நமக்கு அனைத்து தகவல்களையும் சேகரித்து கொடுப்பார்கள்.

உதாரணத்திற்கு ஒரு ஊரில் உங்களது தெருவில் உங்கள் வீட்டின் முன் மேற்கொள்ளப்பட்ட சாலை பணியில் அந்த சாலை எவ்வளவு மதிப்பீட்டில் போடப்பட்டுள்ளது, அதற்கான டெண்டர் எடுத்தவர் யார், என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரியவரும்.

இது ஒரு தனிநபர் சார்ந்த விஷயம் அல்ல.. அறிவார்ந்த மக்களுடன் இயங்கும் ஒரு குடியரசு போல அந்த ஊரில் உள்ள இந்த நூறு பேர் ஒரு உந்துசக்தியாக இருப்பார்கள். நூறு பேரும் அந்த ஊர் மக்களுக்கு தேவையான தேவைகளை அறிந்து கொள்வார்கள். இந்த 100 பேரில் உள்ள சில வெளியூரில வெளிநாடுகளில் உள்ள ஆட்களுடன் தொடர்பில் இருப்பார்கள்..

இதன்மூலம் வெளியூர்களில் வெளிநாடுகளில் அவர்களது அலுவலகங்களில் உருவாகும் வேலைவாய்ப்புகளை நமது இணையதளத்தில் பதிவு செய்வார்கள். இதேபோல மணமகன்-மணமகள் தேவை விபரங்களையும் இதில் பதிவிடுவார்கள். மேலும் சொத்துக்களை வாங்குவது விற்பது போன்ற விபரங்களையும் இதில் பதிவேற்றுவார்கள்.. யாருக்காவது வாழ்த்து சொல்ல நினைத்தால் அதையும் இதன் மூலம் தெரியப்படுத்தலாம்.

கலசப்பாக்கம் மட்டுமல்லாமல் கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களில் வாழும் மக்களும், அங்கு வாழ்ந்து தற்போது வெளியூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களும் வாழ்வாங்கு வாழ என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக செய்ய இருக்கிறோம்.

இதில் புரட்சியும் இல்லை.. மலர்ச்சியும் இல்லை.. இது ஒரு இயங்குதல்.. பங்காற்றுதல்.. மக்களின் வளமான வாழ்க்கையிலும் முன்னேற்றத்திலும் ஒரு சாமானிய குடிமகனின் எண்ணத்திலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வளமான வாழ்வை அமைத்து கொடுக்க நம்மால் முயன்ற ஒரு பங்கேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *