Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 55ஆம் ஆண்டு – சித்ரா பௌர்ணமி பெருவிழா

ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 55ஆம் ஆண்டு

சித்ரா பௌர்ணமி பெருவிழா

19-04-2019 வெள்ளிக்கிழமை

பேரருளுக்குகந்த மெய்யடியார்களே!
தி.மலை மாவட்டம்‌ கலசபாக்கம்‌ வட்டம்‌, பூண்டி என்னும்‌ புனித ஸ்தலத்தில்‌ ஒர்‌ ஒட்டு, வீட்டு ஒட்டு திண்ணையில்‌, ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான்‌ ஆற்று சுவாமி – அமர்ந்திருந்து அமர்ந்தவர், அமர்ந்த நிலையிலேயே எழுந்து ஒர்‌ அடி கூட நடக்காமல்‌ 19 வருட காலம்‌ அமர்ந்த நிலையிலேயே தன்னை தரிசிக்க வருகின்ற லட்சோப லட்சம்‌ அன்பர்களுக்கு அருள்பாலித்து, அவரவர்‌ குறைகளை நீக்கி நல்வழிப்படுத்தி வந்தார்‌. அப்படிப்பட்ட கண்கண்ட தெய்வம்‌ ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான்‌ ஆற்று சுவாமிகளுக்கு, சுவாமிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுவாமிகளின்‌ சரீரத்தையும்‌, தொட்டு தூய்மை செய்வதும், அன்னம் அளிப்பதும், சுவாமிகளின் அணுக்கத் தொண்டரான பிரதம சீடர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிகள் குருசேவையே இறைத்தொண்டு என சேவை உணர்ந்து செய்து வந்தார்‌. அப்படிப்பட்ட குருதேவர்‌ – ஸ்ரீ பூண்டி மகான்‌ ஆற்று சுவாமி சென்ற (03-11-1078) வெள்ளிக்கிழமை, அனுஷம்‌ நட்சத்திரத்தில் காலை 9.00 மணியளவில் ஜீவ சமாதி அடைந்தார். ஜீவ சமாதியின் மேல் பல இலட்ச ரூபாய் செலவு செய்து கற்கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தேறியது.

மேற்கண்ட கண்கண்ட கலியுக தெய்வத்திற்கு நிகழும்‌ விளம்பி ஆண்டு பங்குனி மாதம்‌ 05ஆம் நாள்‌ (19-04-2019) வெள்ளிக்கிழமை மேற்படி ஆசிரமத்தில்‌ 55ஆம்‌ ஆண்டு சித்ரா பெளர்ணமி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. சற்குரு ஸ்ரீ பூண்டி மகான்‌ ஆற்று சுவாமி பக்தர்கள்‌ அனைவரும்‌ மேற்படி இவ்விழாவில்‌ பங்கேற்று சற்குருநாதர்‌ அருளைப்பெற்று நீடூழி வாழ வேண்டி அழைக்கின்றோம்‌.

நிகழ்ச்சி நிரல்

19-04-2019 வெள்ளிக்கிழமை

காலை 5.30 மணிக்கு : மங்கள இசை வாத்தியம்‌, நடை திறப்பு
காலை 8.00 மணிக்கு : கொடியேற்றம்‌
காலை 8.30 மணிக்கு : ஸ்ரீ மகாகணபதி வேள்வி
காலை 9.00 மணிக்கு : பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம்‌ வழங்கப்படும்‌.
காலை 9.30 மணிக்கு : மண்டபத்திலிருந்து – ஸ்ரீ சற்குருநாதரின்‌ பதாகை, பொற்கிரிடம்‌, புனித தீர்த்தம்‌, அபிஷேக பொருட்கள்‌ மற்றும்‌ பஜனை ஊர்வலத்துடன் மகான்‌ சன்னிதானம்‌ வந்தடைதல்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *