தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு. இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலசபாக்கத்தில் நேற்று மிதமான மழை – வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது!
கலசபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (04.05.2025) மிதமான மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக அதிகரித்த வெப்பம் குறைந்து, தற்போது பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் (ஏப்ரல் 21) அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!
திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பிற்பகல் 2:30 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. – வானிலை ஆய்வு மையம்.
ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.21 தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு; சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். – வானிலை ஆய்வு…
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு!
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கலசபாக்கத்தில் மீண்டும் மழை!
கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் மழை ஆரம்பமாகியுள்ளது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, இதன் தொடர்ச்சியாக மாலையில் திடீரென மழை பெய்து வருகின்றது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் தெரிவித்துள்ளது.
கலசபாக்கத்தில் இன்று அதிகாலை முதல் மிதமான மழையும் குளிர்ந்த காற்றும்!
கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழையுடன், குளிர்ந்த காற்று வீசி வருகின்றது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்!
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 6 மணிக்குள்) புயலாக வலுப்பெறுகிறது. புயலாக வலுப்பெற்ற பின் மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாட்டில்…