
Javvadhu Hills, lies on an area of around 260 sq, km, as a part of the Eastern Mountain Range.
There are over 200 small villages in this area!
The average height of the Javvadhu Mountain is 1060 meters – 1160 meters.
The tourist spots in this area of Javvadhu Hill are – the ‘Bheemanmadavu’ falls and the Meteorological Laboratory.
In a village called ‘Padhiri’ in the Javvadhu Hill, there are archaeological items and fossils of the New Stone Age People have lived here and there are gravestones belonging to the Great Stone Age in the locations Keezhcheppili and Mandaparai.
There are various stones with inscriptions belonging to the Pallava Period up to the Naickers’ period!
The most popular tourist spots are Bheman Falls (aruvi), ‘Padagu Kuzham’ (Boat ensemble), Park, Kovilur Lord Siva Temple, Vainukappu Telescope Centre, Amirdhi Wild Life Sanctuary.
Routes
By Air: Thiruvannamalai has situated 189 km from the Chennai Airport.
By Train: Polur Railway Station is located between Thiruvannamalai and Vellore at a distance of 30 km.
By Road: By road, Javvadhu Hill bottom is located at a distance of 30 km by road from Thiruvannamalai. From here, one has to undertake a journey by road for a distance of 40 km on the mountain path to reach Javvadhu Hill.
From Chennai: There are 3 routes to Javvadhu Hill from Chennai Metro City. One route is via Vellore, Ambur, Vaniyambadi, and Thirupathur.
The second route is via Thiruvallur, Thiruthani, Sholingur, Ranippettai, Vellore and then taking the Thirupathur route.
The 3rd route is via Thiruvannamalai, Chengam.
கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான சவ்வாது மலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது 200 மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். இம்மலைத்தொடரில் உள்ள பீமன்மடவு அருவியும் காவலூர் வானியல் ஆய்வகமும் முதன்மை சுற்றுலா இடங்களாகும்.
பீமன் அருவி, படகு குழாம், பூங்கா, கோவிலூர் சிவன் கோயில், வைனுபாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வனவிலங்கு சரணாலயம் ஆகியன முக்கிய முக்கிய சுற்றுலா இடங்கள் ஆகும்.
ஜவ்வாது மலைக்கு இன்னொரு சிறப்பு - காவலூர். ஜமுனா மரத்தூரிலிருந்து சாலையைக் கடந்து 11 கி.மீ தாண்டினால் வரும் வைனு பாப்பு அப்ஸர்வேட்டரி. வானியல் பற்றிப் படிக்கும் காஸ்மாலஜி மாணவர்களுக்கான வரப்பிரசாதம் இது. வைனு பாப்பு என்பவர், பிரபலமான இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர். அவர் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. பள்ளி மாணவர்களுக்கு இது உபயோகமான இடமாக இது இருக்கும்.இம்மலையில் காவலூர் என்ற இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தொலை நோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் அமைந்துள்ளது. இங்கு வானியல் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இம்மையத்திலிருந்து வானைக் காண சனிக்கிழமை மட்டும் பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஜவ்வாது மலையில் உள்ள மேல்பட்டு கிராமத்தில், கற்கால தொழிற்கூடங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜொனை மடுவு என்ற இடத்தில் உள்ள பாறையின் மீது 15 செ.மீ., அகலத்தில் 1 அடி நீளத்துக்கு 11 கற்குழிகள் உள் ளன.
அதேபோல், சிறிது தொலைவில் உள்ள பாறையின் மீது 2 கற்குழிகள் காணப்படுகின்றன. மேலும், கல் ஆயுதங்களை தயாரிப்பதற்காக, அவற்றைப் பாறையில் தேய்த்த தடயங்கள் உள்ளன. அந்தப் பகுதி யில் ஏராளமான கல் ஆயுதங்களும் உள்ளன. மேலும் இங்குள்ள நீர்மத்தி மரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, நீர்மத்தி மரத்தின் வரலாற்றுக்கும் தோற்றத்துக்கும் ஏகப்பட்ட கதைகள் உண்டு. கிட்டத்தட்ட 15 பேர் கை சேர்த்து சுற்றி நிற்கும் அளவு தடிமன் கொண்டது இந்த மத்தி மரம். சுமார் 20 பெருங்கிளைகளையும், நூற்றுக்கணக்கான சிறுகிளைகளையும் கொண்டிருக்கிறது. நீர்மத்தி மரத்தின் வேர்கள், 80 மீட்டர் வரை பரந்து விரிந்திருக்கின்றன. இதய நோய்க்கு இந்த மத்தி மரத்தின் இலைகள் பெரிதும் பயன்படும்.
வான் வழியாக
சென்னை விமான நிலையம் 189 கி.மி தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது.
தொடர்வண்டி வழியாக
போளூர் இரயில் நிலையம் திருவண்ணாமலை வேலூர் இடையில் 30 கிமி தூரத்தில் அமைந்துதள்ளது.
சாலை வழியாக
திருவண்ணாமலையிலிருந்து சாலை வழியாக 30 கிமி தூரத்தில் ஜவ்வாதுமலை அடிவாரம் அடைந்து அங்கிருந்து சுமார் சாலை வழியாக 40 கிமி மலைமேல் பயணம் செய்து ஜவ்வாதுமலை அடையலாம்.
ஜவ்வாது மலைக்கு மூன்று வழிகள் உண்டு. வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் வழியாக ஜவ்வாது மலைக்குப் போவது ஒரு வழி. திருவள்ளூர், திருத்தணி, சோளிங்கர், ராணிப்பேட்டை வழியாக வேலூர் போய் மறுபடியும் திருப்பத்தூர் ரூட்டைத் தேர்ந்தெடுப்பது இன்னொரு வழி. திருவண்ணாமலை, செங்கம் வழியாகப் போவது வேறொருவழியாகும் .