Web Analytics Made Easy -
StatCounter

நிவார் புயல் குறித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

  1. கிராம ஊராட்சிகளில் குக்கிராமம் வாரியாக பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் நபர்களை கண்டறிந்து அருகாமையில் உள்ள பள்ளி, திருமணமண்டபம் (ம) VPRC மையங்களில் தங்க வைக்க அதிகபட்சம் 3 இடங்களை தேர்வு செய்ய
    வேண்டும். மேற்படி கட்டிடத்தில் மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தி வைக்க வேண்டும். மேற்படி கட்டிடத்திற்கான சாவியை இன்று இரவே பெற்று வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. குடியிருப்பு வாரியாக குடிசை வீடு மற்றும் பழுதடைந்துள்ள வீடுகளில் வசிக்கும் நபர்களின் பெயர் பட்டியலினை தயார் செய்து நாளை காலை 10.00 மணிக்கு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  3. மேற்படி இடத்தை சுத்தப்படுத்தி பாகிங் செய்யவேண்டும்.
  4. மெழுகுவர்த்தி மற்றும் பேட்டரிகள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
  5. ஆடு, மாடுகள், மற்றும் பொதுமக்களை 48 மணி நேரத்திற்கு பாதுகாப்பாக இருக்க தெரிவிக்க வேண்டும்.
  6. புயல் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
  7. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் 50 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  8. மின்சாரம் 24.11.2020 மாலை 3.00 மணிமுதல் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தம் செய்யப்பட இருப்பதால் அனைத்து மேநீர் தேக்க தொட்டி மற்றும் மினி டேங்குகளிலும் தண்ணீர் ஏற்றி நிரப்பி குளோரினேசன் செய்து வைத்திருக்க வேண்டும்.
  9. மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் JCB இயந்திரம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மற்றும் இவர்களின் Phone மற்றும் முகவரினை இன்று இரவு 8.00 மணிக்குள் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
  10. அனைத்து ஊராட்சிகளிலும் தலா இரண்டு மூட்டைகள் பிளிச்சிங் பவுடர் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
  11. புயலால் ஏற்படும் குப்பைகளை சேகரிக்க இடம் தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  12. சேதாரம் ஏதும் ஏற்படின் உடனடியாக தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள். 04181241222, 04181241722, 7402606655, 7402606654.
  13. எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சறிக்கை நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்படுகிறது.
  14. அனைத்து ஊராட்சி செயலர்களும் நாளை காலை 6.00 மணியிலிருந்து சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து மேற்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கான புகைப்படத்தினை Whatsapp Group - ல் பதிவிட தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *