பூண்டி
சேயாற்றின் வடக்கரையில் அமைந்த ஆறாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். இத்தலமானது போளூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கும் ராஜகோபுரம் இல்லை. இதுவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் தான். அகத்தியர் கோபத்திற்கு ஆளான இரண்டு அடியார்கள் இங்கு நரியாக இருந்து, ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருபுறமும் இரண்டு கல் நரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதினாறு பட்டைகள் கொண்ட 'ஷோடச லிங்க'த் திருமேனியுடன் கரைகண்டேஸ்வரர் அருள்கிறார்.





