Web Analytics Made Easy -
StatCounter

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று (ஏப்ரல் 25) முதல் மே 24-ஆம் தேதி வரை தேர்வாணையத்தின்…

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும்; 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதித்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது – பள்ளிக் கல்வித்துறை. பள்ளி திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.

மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு!

மையோனைஸ் செய்ய பயன்படுத்தப்படும் பச்சை முட்டை உணவினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

வணிக வரி வசூல் ரூ.1.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு!!

தமிழக வணிக வரித்துறையின் மொத்த வரி வருவாய், 2024 – 25ல், 1.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டில், 12,139 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.    

பறவைகளுக்காக தண்ணீர் வைக்கும் கலசபாக்கம் குழந்தைகள்!

கலசபாக்கம் பகுதியில், கோடைக் கால வெப்பத்தில் தாகமடையும் பறவைகளுக்காக குழந்தைகள் தங்கள் வீட்டு மொட்டைமாடி மற்றும் பால்கனிகளில் தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை வைத்து வருகின்றனர். பறவைகளின் தாகத்தை தீர்க்கும் இந்த அன்பான செயல், மற்றவர்களும்…

வரும் 25-ம் தேதி திருவண்ணாமலையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிப்பு.    

அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று 23-ம் தேதி கடைசி நாள்.    

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு!

UPSC CSE 2024 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 1,009 பேரில் 335 பேர் பொதுப்பிரிவினர். 109 பேர் EWS பிரிவினர், விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in…

குரூப் -1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

கடந்த மாதம் மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற குரூப் -1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஜூலை மாத முக்கிய சேவை.. இன்று முன்பதிவு தொடக்கம்!

திருப்பதி கோயிலில் ஜூலை மாத கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.  ஜூலை மாத சிறப்பு தரிசனம், 300…

சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள்!

சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்கப்படும். கிரிவலப் பாதை முழுவதும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பபட்டுள்ளது. சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு தரிசனம் ரத்து என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்…

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு ரூ.34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல்  பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்.

மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!!

அனைத்து தாலுகாக்களிலும், ஜமாபந்தி நடத்தும் பணியை, மே 31க்குள் முடிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் – திரு சாய்குமார் அறிவிப்பு.    

சர்வே எண், பட்டா விபரம் அறிய புதிய செயலி!

நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது.

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் (ஏப்ரல் 21) அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.    

JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!!

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது. 24 மாணவர்கள் 100% மதிப்பெண், தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம்.    

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் மீண்டும் உயர வாய்ப்பு!!

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு. 5ஜி திட்டங்களுக்கான கட்டணங்களையும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.    

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி சவரன் ரூ.71,560க்கு விற்பனை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் விலை மாற்றமின்றி ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.    

போளூர் பேரூராட்சி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

போளூர் பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் உழவர் சந்தையில் செயல்பாடுகளை குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள் தேவை!

• அபாகஸ் (Abacus) • கை எழுத்துப் பயிற்சி (Handwriting) • கலிகிராஃபி (Calligraphy) • வேதிக் கணிதம் (Vedic Maths) ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை. இடம் :-   திருவண்ணாமலை, போளூர், தேவிகாபுரம், செங்கம்…

திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து!

கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பௌர்ணமி, பழனி கோயில் தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் கட்டண தரிசனம் ரத்து அமைச்சர் சேகர்பாபு.    

அண்ணாமலையார் கோயிலில் புனித தாமரை குளத்தில் பாலி கைவிடல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தாமரை குளத்தில் பாலி கைவிடுதல் நடைபெற்று, அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.    

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாணம் உற்சவம் சுவாமி பெரியநாயகர், அம்மனுக்கு நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பிற்பகல் 2:30 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. – வானிலை ஆய்வு மையம்.    

ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.21 தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு; சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். – வானிலை ஆய்வு…

தமிழ் புத்தாண்டில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடும் – அமுது இயற்கை அங்காடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் இயற்கை விவசாயத்தில் பெருமை கொண்ட ஆற்றல் Jc. மு. பிரவீண்குமார் அவர்களின் தலைமையில் இயற்கை விளைபொருள் அங்காடி “அமுது”, தனது 5வது ஆண்டு பயணத்தை இனிய தமிழ் புத்தாண்டு தினத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளது! தொடர்பு விவரங்கள் முகவரி: எண்.34, S.K…

அரசு கணினி சான்றிதழ் தேர்வு – ஆன்லைன் விண்ணப்பம் நாளை முதல் தொடக்கம்!

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (16.04.2025 ) முதல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1,030 ஆகும். தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் www.tndtegteonline.com இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படுகின்றது.    

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் த. தினேஷ் தேசிய வருவாய் திறனறித் தேர்வில் (NMMS) வெற்றி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் அமைந்துள்ள அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் த. தினேஷ், 2024–25ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் திறனறித் தேர்வில் (NMMS) சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.…

கலசபாக்கத்தில் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!

கலசபாக்கத்தில் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் (11.04.2025) அன்று நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மட்டும் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் (11.04.2025) அன்று நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மட்டும் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…

கலசபாக்கம் வட்டத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஊரக தோட்டக்கலைப் பணியின் ஒரு பகுதியாக அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த பயிற்சியின் ஒரு…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (10-04-2025) பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம், இந்தாண்டு 11.04.2025 முதல் 16.04.2025 வரை நடைபெற உள்ளது.இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம், அருணாசலேஸ்வரர் மற்றும் அபிதகுசம்பிகையம்மனின் பாவனையான கல்யாணமாக…

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை!!

வேலூரில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் தற்போது இடியுடன் கனமழை பெய்து வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம், ஜவ்வாது மலை பகுதியில் காற்றுடன் கனமழை.    

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள பனைமேட்டு ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள பனைமேட்டு ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி திருக்கோவில் (20-04-2025) அன்றைய தினம் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. பக்தர்கள் கலந்து கொண்டு முனிஸ்வரன் அருள்பெற கேட்டுக் கொள்கின்றோம்.

திருவண்ணாமலை பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

பங்குனி மாத கிரிவலப் பௌர்ணமி 12-ம் தேதி (சனிக்கிழமை)அதிகாலை 4:15 மணிக்கு தொடங்கி மறுநாள் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:08 மணிக்கு நிறைவடைகிறது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.    

திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் மெமு ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து!

காட்பாடி ரயில்வே யார்டு பராமரிப்பு பணிக்காக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் மெமூ ரயில் இன்று 9-ம் தேதியும், ஏப்ரல் 11-ம் தேதியும், 2 நாட்களுக்கு ரத்து.    

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நேற்று (08.04.2025) வியாழக்கிழமை, பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாவது…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்புகள்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் கணினி பயிற்சி வகுப்புகளில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயில்கின்றனர்.ஆர்வமுடன் கலந்துகொள்ளும் மாணவர்கள், கணினி பற்றிய அடிப்படை அறிவுகளைப் பெறுவதோடு, தொழில்நுட்பத்தில் தங்களை…

கலசபாக்கம் – வில்வாரணி சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது!

கலசபாக்கத்தில் வில்வாரணி செல்லும் சாலையில் போளூர் உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை மூலமாக இன்று (09.04.2025) சாலையில் இருபுறமும் வெள்ளை லைன் மார்க் போடும் பணியும் மற்றும் தடுப்புச்சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகின்றது.

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் திருத்தேர் திருவிழா!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (08.04.2025) செவ்வாய்கிழமை திருத்தேர் விழா நடைபெற்று வருகின்றது. இதில்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் இன்று (08.04.2025) திருத்தேர் விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (08.04.2025) செவ்வாய்கிழமை திருத்தேர் விழா நடைபெறுகின்றது

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில் வரி உயர்வு.    

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் தொடங்குகிறது!!

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் 1 முதல் 6 வகுப்புகளுக்கு இன்றும் 6 முதல் 9 -ம் வகுப்புகளுக்கு (நாளை ஏப்-8) தொடங்குகிறது. 6,7 வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 8, 9-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4:30…

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு. விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு…

கலசபாக்கம் வியாபாரிகளின் சங்க ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் – அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கீழ் தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்புடன் இணைந்து, கலசபாக்கம் தாலுகா வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தேதி: 06.04.2025 (ஞாயிற்றுக்கிழமை)…

கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்தின் மாதாந்திர கலந்துரையாடல்!

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல் கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் அருகே இன்று காலை 10 அளவில் நடைபெற்றது. பொருள்: • சிட்லிங் பயண அனுபவம். • போளூர்…

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது இம்முகாம்…

ஏப்ரல் 7 முதல் விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் 1,299 எஸ்.ஐ., பணி இடங்களுக்கான தேர்வுக்கு, வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம்; ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் : தமிழ்நாடு சீருடை…

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்!

தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.  

கலசபாக்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வு மற்றும் ஆய்வுக் கூட்டம்!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில் நேற்று கலசபாக்கத்தில் வட்டாட்சியர் அலுவகம், ஊராட்சி ஒன்றிய அலுவகம், முதியோர் காப்பகம், கூட்டுறவு கடை, மறுவாழ்வு மையம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஆய்வு மற்றும்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்ரா பௌர்ணமி 2025 – ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், அவர்கள் தலைமையில் நேற்று (02.04.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி 2025 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்…

தமிழில் பெயர் பலகை மாற்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகம், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகள் தமிழில் இடம்பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள்…

தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் செலுத்த வசதி!

TNPSC தேர்வுக்கான கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் இனி செலுத்தலாம்.