









ஜெ.பி சாப்ட் சிஸ்டம் நிறுவனர்களின் தந்தை தெய்வத்திரு பு.க. ஜெயவேல் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி “கற்று கொடுப்போம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது…
கலசபாக்கத்தில் அமைந்துள்ள எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் இந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கணினி உள்ளிட்ட பயனுள்ள பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது…
இந்த பயிற்சியின் மூலம் கணினிகளை கையாளுதல், வலைத்தளம், இணையத்தளம் மற்றும் தேடுபொறிகள், வரைபடங்களை பயன்படுத்தல் போன்ற அடிப்படை விஷயங்கள் கற்று கொடுக்கப்பட்டு வருகிறது…
இதை தொடர்ந்து ஜெ.பி சாப்ட் சிஸ்டம் நிறுவனர்களின் தந்தை தெய்வத்திரு பு.க. ஜெயவேல் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி “கற்று கொடுப்போம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது…
5 முதல் 15 வயதிற்குட்பட்ட எந்த மாணவர்களும் இதில் இணைந்து இலவசமாக கணினி உள்ளிட்ட பயிற்சிகளை பெறலாம்.
இதில் இணையும் ஒவ்வொரு மாணவரும் மற்ற மாணவர்களுக்கு கற்று கொடுப்பார்கள், கற்று கொடுக்க தயாராக இருக்கும் யார் ஒருவரும் எங்களுடன் இணைந்து நம் பகுதி குழந்தைகளுக்கு கற்று கொடுக்கலாம் !
வாருங்கள், கற்று கொடுப்போம் !
மேலும் விவரங்களுக்கு எங்கள் அலுவலகத்திற்கு வருகை தரவும்.





