Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள் காமாட்சி அம்மன், சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென்கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே "சேயாறு", இதுவே தற்போது "செய்யாறு" என்று அழைக்கப்படுகிறது.

முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர்.அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடக்கரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.

காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், தென்மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய ஏழு இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.

காஞ்சி: :

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், செங்கம் நகருக்கு வடமேற்கில் உள்ளது காஞ்சி என்ற திருத்தலம். இதுவே சப்த கரை கண்ட தலங்களில் முதல் தலமாகும். இங்குள்ள இறைவனின் பெயர் "கரைகண்டீஸ்வரர்" என்பதாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் 10-ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நாயக்க மன்னர்களும், நகரத்தாரும் திருப்பணி செய்துள்ளனர். இந்த ஆலயத்தில் சப்த கரை கண்ட தலங்களின் ஏழு சிவலிங்க திருமேனிகளும் ஓரிடத்தில் உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு நடைபெறும் அனைத்து திருவிழாக்களும், இந்த ஆலய இறைவனுக்கும் செய்யப்படுவது இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.

தொடர்பு கொள்ள