கடலாடி:
செய்யாற்றின் வடக்கரையில் அமைந்த சப்த கரை கண்ட தலங்களில் இரண்டாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் திருநாமம் "வன்னீஸ்வரர்" என்பதாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். இங்குள்ள பர்வதமலையின் அடிவாரத்தில், அண்ணாமலையாரின் பாதம் பட்ட இடம் உள்ளது. 'கடவுளின் பாதம் பட்ட மலையடி' என்பது 'கடவுளடி' என்று ஆகி, பின்னர் "கடலாடி" என்றானதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயமானது அமைந்துள்ளது.







