Web Analytics Made Easy -
StatCounter

2.99 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் : எம்எல்ஏ திரு.வி.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி டாக்டர் கே.பழனிச்சாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் தீனதயாள் உபத்யாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 26.22 கோடி மதிப்பில் 6 துணை மின் நிலையங்களை காணொலி காட்சி மூலம் இன்று தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கலசபாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் தீனதயாள் உபத்யாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 2.99 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இந்த துணை மின் நிலையத்தில் பயன்படும் கிராமங்கள் கடலாடி, மேலாகொடி, மாம்பாக்கம், புதுப்பேட்டை, குன்னத்தூர், தாமரைப்பாக்கம், கிழக்குமேடு, கோயில்மாதிமங்கலம், தென்மகாதேவமங்கலம், அருணகிரிமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் போளூர் வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க தலைவர் பொய்யாமொழி, கடலாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர்கள் சண்முகம், இளங்கோவன், உதவி பொறியாளர்கள் சொர்ணலதா, சிவசங்கர், ஏழுமலை, உதவி கணக்கு அலுவலர் லட்சுமி மற்றும் மின் வாரிய பணியாளர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *