கிராம ஊராட்சியின் பெயர் : கடலாடி | ||
---|---|---|
பதவியின் பெயர் | வேட்பாளரின் பெயர் | புகைப்படம் |
கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 - 2024 ) |
திரு என். ஆறுமுகம் | ![]() |
கடலாடி அறிமுகம்
இந்தியா, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஒர் ஊராட்சி ஆகும். இதன் அருகில் கலசபாக்கம், துரிஞ்சாபுரம், புதுப்பாளையம் மற்றும் போளூர் போன்ற ஒன்றியங்கள் உள்ளன. இக்கிராமத்தின் வடக்கு திசையில் புகழ்பெற்ற பர்வத மலை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும், ஆண்கள் 7540 பேரும் உள்ளனர். இக்கிராமத்தின் முக்கிய தாெழில் விவசாயம் ஆகும். செய்யாறு மற்றும் கல்லாறு மற்றும் இக்கிராமத்தை சுற்றியுள்ள ஏழு ஏரிகளிலிருந்து கிடைக்கும் நீரிலிருந்து விவசாயம் செய்யப்படுகிறது.
இந்த ஊராட்சியில் உள்ள முக்கிய கோவிகள்: வன்னீஸ்வர் மற்றும் கரைகண்டீஸ்வரர் கோயில், லட்சுமி நாராயணபெருமாள் கோயில், காமாட்சியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், திரௌபதியம்மன் கோயில், காளியம்மன் கோயில், அதிகண்ணியம்மன் கோயில்
இந்த ஊராட்சியில் உள்ள பள்ளிகள்: அரசு மேல்நிலைப் பள்ளி, நிதிஉதவி தொடக்கப்பள்ளி, காமராஜ் நர்சரிப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மாம்பாக்கம்., ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மேல்கொடி., ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளி, ஜெகஜோதி மெட்ரிக் பள்ளி.,
ஸ்ரீராகவேந்திரா நர்சரி & பிரைமரி பள்ளி, கடலாடி,
2.99 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் : எம்எல்ஏ திரு.வி.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி டாக்டர் கே.பழனிச்சாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் தீனதயாள் உபத்யாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 26.22 கோடி மதிப்பில் 6 துணை மின் நிலையங்களை…
கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடியில் ஊராட்சி செயலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது
கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடியில் ஊராட்சி செயலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஊராட்சி செயலாளர்கள் தின எழுச்சி கொண்டாட்டத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் மக்கள் இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவர்கள் இலவச நோட்டு புத்தகங்கள் பேனா…